Published : 07 Oct 2014 09:51 AM
Last Updated : 07 Oct 2014 09:51 AM
ஹஜ் பயணத்தின் போது இஸ்லா மியர்கள் புனிதமாகக் கருதும் பகுதிகளில் ‘செல்பி’ எடுப்பது பரவலான ஆதரவையும், அதே அளவு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இணையத்தின் சமூக வலைத்தளங்களில் விவாதம் கிளம்பியுள்ளது.
மெக்காவிலுள்ள காபாவைச் சுற்றியும், அங்கு நடைபெறும் பல்வேறு மத சம்பிரதாய நிகழ்வுகளையும் தங்களுடன் சேர்த்து ‘செல்பி’ (தங்களைத் தாங்களே எடுத்துக் கொள்ளும் புகைப்படம்) எடுத்து அதனை சமூக வலைத் தளங்களில் ஏராளமான ஹஜ் பயணிகள் பதிவேற்றம் செய்து வருகின்றனர். ஹஜ் பயண செல்பிகள் பெரும் பிரபல்யம் அடைந்துள்ளன.
24 வயதான அலி இது தொடர் பாகக் கூறும்போது, “இது எனது முதல் புனித யாத்திரை. இப்பகுதியில் என்னைச் சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் ஆவணப்படுத்துவது மிகவும் முக்கியமானது” எனத் தெரிவித் துள்ளார். அவர், சாத்தான் மீது கல்லெறியும் சுவர் அருகே நின்று செல்பி எடுத்துக் கொண்டுள்ளார்.
குவைத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, “நான் எங்கு சென்றாலும், புகைப்படம் எடுப்பேன். தற்போது அனைவரிடமும் சிறிய கேமராக்கள் உள்ளன. இவை முழு காட்சியையும் பதிவு செய்கின்றன” என்றார்.
விமர்சனம்
ஹஜ் பயண செல்பிகளை கடுமையாக விமர்சனம் செய்து, பலரும் ட்விட்டரில் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். நான் 90-ம் ஆண்டுகளின் மத்தி யில் உம்ரா சென்ற போது, கேமரா வைப் பார்த்த எந் தந்தை, ‘விலக் கப்பட்டது’ எனக் கூச்சலிட்டார். தற்போது, ஹஜ் செல்பிகள் பிரபல்யமாகியுள்ளது. என்ன உலகம் இது! என ஒருவர் பதிவிட் டுள்ளார்.
காவா என்ற பெயரில் ட்விட்டரில் ஒருவர் “இது அல்லாவுடன் தொடர்பு கொள்ளும் நேரம். எனது ஆன்மாவைச் சுத்திகரிக்கும் நேரம். ஹஜ் செல்பி-க்களை எடுக்கக் கூடாது” எனப் பதிவிட்டுள்ளார்.
ஆதரவு
அதே சமயம் செல்பிகளுக்கு ஆதரவாகவும் சிலர் குரல் கொடுத்துள்ளனர். ஹஜ் பயணத்தின் போது, புகைப்படங்களுக்கு அனுமதியிருக்கும் நிலையில், செல்பி-களை மட்டும் ஏன் எடுக்கக்கூடாது? எனச் சிலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.
பேராசிரியர் கருத்து
இதுதொடர்பாக, சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தைச் சேர்ந்த ஷாரியா சட்ட பேராசிரியர் ஒருவர் கூறும்போது, “புகைப்படங்கள் தனிப்பட்ட நினைவுப் பொக்கிஷங்களுக்காக எடுக்கப்பட்டால் அதனால் தவறில்லை. ஆனால், பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஹஜ் சம்பிரதாயப் பகுதிகளில் எடுக்கப்பட்டால் அது தடை செய்யப்பட வேண்டும். செல்பி-களைத் தவிர்ப்பது முஸ்லிம்களுக்கு நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT