Published : 16 Apr 2023 05:36 AM
Last Updated : 16 Apr 2023 05:36 AM
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.83 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அபுதாபியில் இருந்து சென்னைக்கு நேற்று விமானத்தில் வந்த பயணிகள், அவர்களது உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். 4 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.
அவர்கள் ரூ.1.83 கோடி மதிப்புள்ள 3 கிலோ 422 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. தங்கத்தையும், பைகளில் மறைத்து வைத்திருந்த ரூ.25.2 லட்சம் மதிப்புள்ள எலெக்ட்ரானிக் பொருட்கள், செல்போன்கள், லேப்டாப்கள், வெளிநாட்டு சிகரெட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், 2 பேரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT