Published : 29 Mar 2023 11:07 AM
Last Updated : 29 Mar 2023 11:07 AM
சென்னை: ஆவடியில் ஜிம் மாஸ்டர் ஒருவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னைக்கு அருகில் உள்ள ஆவடியில் ஜிம் வைத்து நடத்தி வருபவர் ஆகாஷ். 25 வயதான இவர் மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் கடுமையான பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் திடீரென்று ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், அதிக அளவில் ஸ்டெராய்டு ஊசி செலுத்திக் கொண்டதால், அவருடைய 2 சிறுநீரகங்களும் செயல் இழந்து மரணம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...