Published : 27 Mar 2023 07:08 AM
Last Updated : 27 Mar 2023 07:08 AM
சென்னை: சென்னை பெருங்குடியில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி, அவரது உறவினர்கள், நண்பர்கள் போராட்டம் நடத்தினர். பெருங்குடி ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் ஜெய் கணேஷ்(33). சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களிடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் விளையாடிய ஜெய் கணேஷுக்கும், சக வழக்கறிஞர் ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர், இரவு 9 மணியளவில் ஜெய் கணேஷ் வீட்டருகேநின்று செல்போனில் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல், திடீரென அரிவாள், கத்தி உள்ளிட்டவற்றால் அவரை வெட்டிவிட்டுத் தப்பியது.
தகவலறிந்து வந்த துரைப்பாக்கம் போலீஸார் ஜெய் கணேசைமீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரைப் பரிசோதித்தமருத்துவர்கள், ஏற்கனவே அவர்இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரதுஉறவினர்களும், நண்பர்களும் மருத்துவமனையை முற்றுகை யிட்டு, கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் மற்றும் மருத்துவமனை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
அங்கு வந்த ராயபேட்டை போலீஸார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து துரைப்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட ஜெய்கணேஷின் சொந்த ஊர் கோவில்பட்டி. அவருக்கு மனைவி, இரு பிள்ளைகள் உள்ளனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, ‘‘பிரபல ரவுடி சி.டி.மணியின் நட்பு வளையத்தில்ஜெய் கணேஷ் இருந்துள்ளார். இந்நிலையில், இரு வழக்கறிஞர்களிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால், போட்டி வழக்கறிஞர் ஜெய் கணேஷை கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தாரா அல்லது கிரிக்கெட் போட்டியின்போது ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்ததா என்றுவிசாரித்து வருகிறோம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT