Published : 18 Mar 2023 06:59 AM
Last Updated : 18 Mar 2023 06:59 AM
நாட்றாம்பள்ளி: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டம், கொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சரளா (34). இவர், பச்சூர் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். அதன்பிறகு, தான் வந்த இரு சக்கர வாகனத்தின் ‘சீட்’ கவரில் அந்த பணத்தை வைத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.
வழியில் தேநீர் கடைக்கு சென்று தேநீர் அருந்திய சரளா அங்கிருந்து புறப்பட்டு பெட்ரோல் பங்க் சென்று பெட்ரோல் போட சீட் கவரை திறந்த போது, அதில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து நாட்றாம்பள்ளி காவல் நிலையத்தில் சரளா அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT