Published : 16 Mar 2023 06:06 AM
Last Updated : 16 Mar 2023 06:06 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கஞ்சனூரை சேர்ந்தவர் நடராஜன் (40). இவர் கடந்த 2014-ம் ஆண்டு தருமபுரி மாவட்டம், அம்பலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிமேகலை (39) என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
மணிமேகலை கடந்த 2006-ம் ஆண்டில் தமிழ்நாடு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். விழுப்புரம் பானாம்பட்டு பாதை ஜெயகவுரி நகரில் மணிமேகலை குடும்பத்தினருடன் வாடகை வீட்டில்வசித்து வந்தார். இவர்களுக்கு மிதுன்சாய், நித்தேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் வெளிமாநில தொழிலாளர்களின் நலன்காக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் மணிமேகலை பணி புரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 10-ம் தேதி காலை வீட்டில் இருந்த மணிமேகலை , மண்ணெண்ணையைஊற்றி தீவைத்துக்கொண்டார். இவருடைய அலறல் சத்தம் கேட்டதும் நடராஜன் மற்றும் அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இத்தகவல் அறிந்ததும் டிஎஸ்பி பார்த்திபன் மற்றும் நகர போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், குடும்பத்தகராறு காரணமாக மணிமேகலை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந் நிலையில் சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மணிமேகலை நேற்று முன் தினம் இரவு சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT