Last Updated : 11 Mar, 2023 01:01 AM

 

Published : 11 Mar 2023 01:01 AM
Last Updated : 11 Mar 2023 01:01 AM

கொலை வழக்கில் ஒருவருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை - சேலம் நீதிமன்றம் தீர்ப்பு

சேலம்: சேலம் நீதிமன்றத்தில் கொலை வழக்கில் ஒருவருக்கு பத்து ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது.

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள மூலங்காடு, பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் குமார் (43). அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் (35) என்பவருடன் பொது குடிநீர் குழாயில் குழி தோண்டிக் கொண்டிருந்த போது வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பரமசிவத்தை, குமார் தாக்கியுள்ளார்.

அங்கிருந்த, பரமசிவத்தின் தாயார் சின்னம்மாள் குமாரை தடுத்தபோது, அவரை அடித்து கீழே தள்ளியுள்ளார். இதனால் சின்னம்மாள் பலத்த காயம் அடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி கடந்த 2013ம் ஆண்டு பிப்ர., 17ம் தேதி இறந்துவிட்டார்.

இதுசம்பந்தமாக மேச்சேரி போலீஸார் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை, சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கொலை வழக்கில் குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, குமாரை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x