Published : 10 Mar 2023 11:50 PM
Last Updated : 10 Mar 2023 11:50 PM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பூட்டிய வீடுகளில் திருடிய கொண்டு விற்று சின்னசேலத்தில் பைக் ஷோரூம் நடத்திவந்த நபரை விருத்தாசலம் போலீஸார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் கடந்த சில மாதங்களாக பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை உள்ளிட்ட பணம் திருடுபோவது வாடிக்கையாக நிகழ்ந்து வந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் விருத்தாசலம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள நாகராஜன் என்பவர் வீட்டில் கதவு உடைக்கும் சத்தம் கேட்டு, அருகிலிருந்தவர்கள், காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தன்பேரில், போலீஸார் அங்கு சென்றபோது அந்த வீட்டில் யாருமில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பைக்கை பறிமுதல் செய்து, ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த வாகனம் விருத்தாசலத்தை அடுத்த விளக்கப்பாடி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் குணா(31) என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவரை 4 தினங்களுக்கு முன்னரே பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் பூட்டிய வீடுகளில் சுமார் 300 பவுன் வரை நகை திருடியதும், அந்த நகைகளை வழக்கமாக பாதி விலைக்கு விற்பனை செய்யும் கடைகளில் விற்பனை செய்திருப்பதும், அவ்வாறு கிடைத்தப் பணத்தில் பூதாமூரில் மெத்தை வீடும், சின்னசேலத்தில் பைக் ஷோரூமும் நடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் விற்பனை செய்யப்பட்ட 45 பவுன் நகைகளை மீட்டு, நேற்று குணாவை கைது செய்தனர்.
மேலும் குணாவின் இந்த திருட்டு நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்ததாக காவல்துறையால் கூறப்படும் கண்ணாயிரம், சுகன்யா, மனோகர் மற்றும் செந்தில் ஆகியோரை விரைவில் கைதுசெய்து திருடு போன சொத்துக்களும் மீட்கப்படும் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பிரிவு காவலர் உடந்தையா?: விருத்தாசலத்தில் தொடர் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டதாக குணா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குணா நடவடிக்கைக் குறித்த தகவல் தனிப்பிரிவு காவலர் பாலமுருகன் அறிந்ததே என விருத்தாசலம் காவல் நிலைய சக காவலர்களே தெரிவிக்கன்றனர். தற்போது அவர் மீண்டும் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தற்போது டிஎஸ்பி ஆரோக்கியராஜ் மேற்கொண்ட தீவிர தேடுதலில் குணா கைது செய்யப்பட்டுள்ளார் எனக் கூறும் விருத்தாசலத்தில் இருந்து பணியிட மாற்றலாகி சென்ற காவலர்கள், ஏற்கனனவே இவர் விருத்தாசலம் பகுதியில் நடைபெறும் சம்பவங்களை அறிந்து அவர்களிடம் கட்டைப்பஞ்சாயத்து செய்தார் என்பதை அறிந்து, சில மாதங்களுக்கு முன் திட்டக்குடிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பதை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தனிப்பிரிவு காவலர் பாலமுருகனிடம் கேட்டபோது, "குணா பழைய குற்றவாளியே. ஏற்கனவே புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்திவந்து வேறு லேபிள் ஒட்டி விற்பனை செய்த வழக்கில் கைதானவர் என்பது மட்டும் எனக்குத் தெரியும். அவருடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT