Published : 09 Mar 2023 06:13 PM
Last Updated : 09 Mar 2023 06:13 PM
சேலம்: சேலத்தில் ஆன்லைன் மூலம் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.9.75 லட்சத்தை பெண்ணிடம் மோசடி செய்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம், சூரமங்கலம், காசக்காரனூர் மாணிக்கவாசகர் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் குமார். இவரது மனைவி சூர்யா (31). இவரது செல்போனில் வாட்ஸ்அப் மூலம் வந்த ஒரு தகவலில், குறிப்பிடப்பட்டுள்ள டாஸ்க்குகளை முடித்தால், ஆன்லைன் மூலம் வேலை தருவதாகக் கூறி ஒரு லிங்கை அனுப்பியுள்ளனர். இதை நம்பிய சூர்யா, அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, சூர்யா தனது வங்கிக் கணக்கில் இருந்து மோசடி நபர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு ரூ.9.75 லட்சம் பரிமாற்றம் செய்தது தெரியவந்தது.
பின்னர், சூர்யாவுக்கு ஆன்லைன் வேலை உறுதி செய்யப்பட்டதாக தகவல் அனுப்பி விட்டு, மர்ம நபர்கள் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டனர். சூர்யா உடனடியாக அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT