Published : 02 Mar 2023 04:00 AM
Last Updated : 02 Mar 2023 04:00 AM
திருப்பூர்: காங்கயம் அருகே பாப்பினி வரதப்பம்பாளையம் காலனியை சேர்ந்தவர் பிரேமா (28). இவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர்.
பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்த பிரேமாவுக்கும், காங்கயம் நத்தக்காடையூரை சேர்ந்த விஜய் (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பிரேமாவை சந்திக்க வரதப்பம் பாளையம் காலனிக்கு விஜய் வந்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் எழுந்தது. சில நிமிடங்களில் பிரேமாவின் அலறல் சத்தம் கேட்டதால், அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்கு சென்றனர்.
அப்போது உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் பிரேமா அலறிக்கொண்டிருந்தார். தீயை அணைத்து பிரேமாவை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அக்கம் பக்கத்தினர் அனுப்பி வைத்தனர். பின் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேமா அனுமதிக்கப்பட்டார்.
நேற்று சிகிச்சை பலனின்றி பிரேமா உயிரிழந்தார். பிரேமா அளித்த மரண வாக்குமூலத்தில், தன் மீது மண்ணெண்ணையை ஊற்றி, விஜய் தீ வைத்ததாக போலீஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, விஜயை காங்கயம் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT