Published : 25 Feb 2023 12:36 PM
Last Updated : 25 Feb 2023 12:36 PM

கும்பகோணம் | அரசுப் பணியினை தடுத்து போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்கள்

கும்பகோணம்: கும்பகோணத்தில் அரசுப் பணியினை தடுத்து போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை கைது செய்து அவர்களது காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கும்பகோணம்-தஞ்சாவூர் சாலைப் பணி தற்போது திருவலஞ்சுழியில் நடைபெற்று வருவதால், அப்பகுதியில் மாசு படிந்த காற்றுடன் மண் பறக்கிறது. இதனை உடனடியாக சீர் செய்ய வலியுறுத்தி, சுவாமிமலை பிரதான சாலையைச் சேர்ந்த சின்னப்பா மகன் நவீன்(30), மணப்படையூர், அண்ணா வீதியைச் சவுந்தரராஜன் மகன் ஜவகர் (25) மற்றும் 3 பேர் கும்பகோணம்-தஞ்சாவூர் சாலை திருவலஞ்சுழி பிரதான சாலையின் நடுவில் காரை நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்துத் தகவலறிந்த சுவாமிமலை போலீஸார், அங்குச் சென்று பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் கலைந்து செல்லுங்கள் எனக் கூறினர். ஆனால் அவர்கள் போலீஸாரிடம் தகராறு செய்து, பணியினை மேற்கொள்ளப்பட விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதனையறிந்த மாவட்ட எஸ்பி ஆசிஷ்ராவத் உத்தரவின் பேரில், டிஎஸ்பி பி.மகேஷ்குமார் மேற்பார்வையில், ஆய்வாளர் சிவ.செந்தில்குமார் மற்றும் போலீஸார், நவீன் மற்றும் ஜவகர் ஆகிய 2 பேரை கைது செய்து கும்பகோணம் கிளைச் சிறையிலடைத்தனர். மேலும், மறியலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x