Published : 18 Feb 2023 07:57 AM
Last Updated : 18 Feb 2023 07:57 AM

தூத்துக்குடி | பிட்காயின் முதலீடு விளம்பரத்தின் மூலம் மோசடி செய்தவர் கைது

தூத்துக்குடி

பிட்காயின் முதலீடு குறித்து விளம்பரம் வெளியிட்டு ரூ.12 லட்சம் மோசடி செய்தவழக்கில், திருவள்ளூரை சேர்ந்த நபரைதூத்துக்குடி சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வவ்வால்தொத்தி கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மகன் ராமர் (48).இவரது முகநூல் கணக்கில் பிட்காயின் முதலீடு தொடர்பான விளம்பரம் ஒன்று வந்துள்ளது. இதையடுத்து ராமர் அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து அதில்குறிப்பிட்டுள்ள வாட்ஸ்-அப் எண்ணில்தொடர்புகொண்டுள்ளார். பின்னர் அவர்கள் கொடுத்த வங்கிக் கணக்குக்கு ரூ.12,10,740 அனுப்பியுள்ளார்.

அதன் பிறகு அந்த நபர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. தான்ஏமாற்றப்பட்டதை அறிந்த ராமர் தேசியசைபர் குற்றப்பிரிவு இணையதளத்தில் புகார் அளித்தார்.

இதுபற்றி விசாரிக்க தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் போலீஸாருக்கு, எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த மோசடியில் ஈடுபட்ட கோவை சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாமிராஜ் மகன்கருணாகரன் (32) கடந்த 3-ம் தேதிகைது செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய திருவள்ளுர் காக்களூர் ஆசிரியர் காலனியைச் சேர்ந்த எபினேசர் மகன் ஓபேத் பால்(38) என்பவரை நேற்று முன்தினம் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து லேப்டாப் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x