Published : 12 Feb 2023 07:18 AM
Last Updated : 12 Feb 2023 07:18 AM

ராமேசுவரம் அருகே கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது

ராமேசுவரம்: இலங்கையிலிருந்து படகில் கடத்தி வரப்பட்ட தங்கத்தை, கடலில் தூக்கி எறிந்த சம்பவம் தொடர்பாக மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் மேலும் 3 பேரைக் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் இருந்து மண்டபம் கடல் பகுதிக்கு படகு மூலம் தங்கம் கடத்தி வந்த சம்பவத்தில், ஏற்கெனவே 3 பேரை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் கடந்த புதன்கிழமை கைது செய்தனர். மேலும், கடத்தல்காரர்கள் கடலில் தூக்கியெறிந்த ரூ.10.50 கோடி மதிப்பிலான, 17.74 கிலோ தங்கத்தை கடலோரக் காவல் படையினர் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட மண்டபம் நாகூர் கனி(30), ஷகுபர் சாதிக்(22), மரைக்காயர் பட்டினம் முகமது சமீர் (29) ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மண்டபம் ஜஹாங்கிர் அப்பாஸ் (29), வேதாளை சாதிக் அலி (35), அசாருதீன் (27) ஆகியோரை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட 6 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x