Published : 04 Feb 2023 06:42 PM
Last Updated : 04 Feb 2023 06:42 PM

சென்னையில் குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட 53.2 கிலோ தங்க நகைகள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு 

சென்னை: குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட 53.2 கிலோ தங்க நகைகளை சென்னை காவல் துறையினர் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கொடுங்குற்றங்கள், கூட்டுக் கொள்ளை, வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளையடித்தல், சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு, திருட்டு, மற்றும் செல்போன் காணாமல் போன வழக்குகளை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்து, களவு சொத்துக்களை மீட்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உத்தரவிட்டதின் பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரிலும், இணை ஆணையாளர்கள் வழிகாட்டுதலில் பேரிலும், துணை ஆணையாளர்கள் நேரடி கண்காணிப்பில் , உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஒருங்கிணைந்த தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த காவல் குழுவினர் 12 காவல் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட திருட்டு, வழிப்பறி வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து தங்க நகைகள், ரொக்கம் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், காவல் குழுவினர் சைபர் குற்றப்பிரிவு குழுவினருடன் இணைந்து, அவர்களது காவல் மாவட்டங்களில் உள்ள காணாமல் மற்றும் திருட்டு போன செல்போன்கள் தொடர்பான புகார்கள் மீது உரிய சட்டபூர்வமாகவும், இணையதள குற்ற தடயவியல் முறையிலும் விசாரணை மேற்கொண்டும், அவர்களிடமிருந்தும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 01.01.2022 முதல் 31.12.2022 வரையில் சென்னை பெருநகர காவல், மண்டல இணை ஆணையாளர்கள் தலைமையில் செயல்படும் புலன் விசாரணை காவல் குழுவினர் சென்னை பெருநகர காவல், 4 காவல் மண்டலங்களிலும், விடு புகுந்து திருட்டு, கொள்ளை, வழிப்பறி, சங்கிலி பறிப்பு, செல்போன் திருட்டு மற்றும் செல்போன் காணாமல் போன வழக்குகள் மற்றும் வாகன திருட்டு உட்பட சொத்து சம்பந்தப்பட்ட குற்ற வழக்குகளில் (Crime Cases) திறம்பட செயல்பட்டு நகைகள் உள்ளிட்ட பொருட்களை மீட்டனர். இவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டு மீட்கப்பட்ட களவுச் சொத்துக்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். இதன் விவரம்:

  • வடக்கு மண்டலம்: 338.350 சவரன் தங்க நகைகள், ரூ.1,90,62,799 ரொக்கம், 469 செல்போன்கள், 125 இருசக்கர வாகனங்கள், 6 ஆட்டோக்கள் மற்றும் 4 இலகுரக வாகனங்கள்,
  • மேற்கு மண்டலம்: 4473.300 சவரன் தங்க நகைகள், ரூ.31,77,790 ரொக்கம், 236 செல்போன்கள், 116 இருசக்கர வாகனங்கள், 10 ஆட்டோக்கள், 8 இலகுரக வாகனங்கள்
  • தெற்கு மண்டலம்: 520.121 சவரன் தங்க நகைகள், ரூ.23,19,260/ ரொக்கம், 426 செல்போன்கள், 105 இருசக்கர வாகனங்கள், 4 ஆட்டோக்கள், 4 இலகுரக வாகனங்ள்
  • கிழக்கு மண்டலம்: 1311.530 கிராம் தங்க நகைகள், ரூ.25,28,090/ ரொக்கம், 356 செல்போன்கள், 79 இருசக்கர வாகனங்கள், 11 ஆட்டோக்கள், 2 இலகுரக வாகனங்கள்
  • மொத்தம்: ரூ.19 கோடியே மதிப்புள்ள 6,643.3 சவரன் (53.2 கிலோ) தங்க நகைகள், ரூ.2,70,87,939/ ரொக்கம்,1,487 செல்போன்கள், 425 இருசக்கர வாகனங்கள், 31 ஆட்டோக்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x