Last Updated : 23 Jan, 2023 06:22 PM

 

Published : 23 Jan 2023 06:22 PM
Last Updated : 23 Jan 2023 06:22 PM

நகைசீட்டு, ஏலச்சீட்டு மோசடி வழக்கு: விருதுநகரில் 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

விருதுநகர்: விருதுநகர் நகைசீட்டு, ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நிர்வாகிகள் 2 பேர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்.

விருதுநகரில் தனியார் நிதி நிறுவனம், நகைக்கடை, ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி நகை சீட்டு, ஏலச்சீட்டு நடத்தி பலரிடம் பணம் பெற்று பல லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசபெருமாளிடம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஏஜெண்ட் வாழவந்தான் மற்றும் பணம் கொடுத்து பாதிக்கப்பட்ட பலர் புகார் அளித்தனர்.

அதில், நகைக்கடையில் நகைச்சீட்டு, ஏலச்சீட்டு, நிலத்திற்கான மாதத் தவணையாக பணம் செலுத்தி வந்ததாகவும், இதில், நகை சீட்டுக்கு நகையாகவும், நில சீட்டுக்கு நிலமாகவும், ஏலச்சீட்டுக்கு பணமாகவும் திருப்பித் தருவதாகத் தெரிவித்து இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் பணம் பெற்று தற்போது மோசடி செய்தாக கூறப்படுகிறது.

இந்தப் புகார் குறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் ஏலச்சீட்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் பாலாஜி வரதராஜன், சுப்பிரமணியன், இவரது மருமகன் பாலவிக்னேஷ், பவுன்ராஜ், நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் சுப்பிரமணியனின் 2வது மனைவி முத்துமாரிமற்றும் சிலர் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து முத்துமாரி (45), பவுன்ராஜ் (38) ஆகியோரை கடந்த 16-ம் தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த நிர்வாகிகள் பாலவிக்னேஷ், கார்த்திகேயன் ஆகியோர் மதுரையில் உள்ள 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர். அதையடுத்து அவர்கள் 2 பேரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x