Published : 21 Jan 2023 01:21 PM
Last Updated : 21 Jan 2023 01:21 PM

மகாராஷ்டிரா | கருத்தரிப்பதற்காக பெண்ணை மனித எலும்பு துகளை சாப்பிடவைத்த 7 பேர் மீது வழக்கு

பிரதிநிதித்துவப்படம்

புனே: கருத்தரிக்க வேண்டும் என்பதற்காக பெண் ஒருவரை மனித எலும்பு துகளை சாப்பிடச் சொல்லி கட்டமாயப்படுத்திய பெண்ணின் கணவர், மாமியார் உட்பட 7 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தனிதனித்தனியாக இரண்டு புகார்களை போலீஸாரிடம் கொடுத்துள்ளார். முதல் புகாரில், திருமணத்தின் போது (2019) கணவன் வீட்டார் வரதட்சணை கேட்டதாக தெரிவித்துள்ளார். இரண்டாவது புகார் அவர் மனித எலும்பு பொடிகள் சாப்பிட கட்டயப்படுத்தப்பட்டது. இந்த புகாரில் போலீஸார் மந்திரம் சூனியம் நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின் பிரவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, புனே நகர இணை காவல் கண்காணிப்பாளர் சுகைல் சர்மா கூறுகையில்," காவல்துறை ஐபிசி 498ஏ, 323,504, 506 ஆகிய பிரிவுகளுடன், மூடநம்பிக்கைகள் ஒழிப்புச்சட்டப்பிரிவு 3 ( மகாராஷ்டிரா நரபலி, மனிதன்மையற்ற, தீய மற்றும் அகோரிகள் நடைமுறை, மந்திரங்கள் தடுப்பு மற்றும் ஒழிப்புச் சட்டம்,2013) கீழ் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண், பல அமாவசை இரவுகளில் அவரது வீட்டில் நடத்தப்பட்ட மந்திரச்சடங்குகளில் ஈடுபட பெண்ணின் மாமியாரால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். அதேபோல், வேறு சில சடங்குகளுக்காக பெயர்தெரியாத சுடுகாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இறந்து போன மனிதர்களின் எலுப்பு பொடியை சாப்பிடவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.

பெண்ணின் மாமியார் அவரை மகாராஷ்டிராவின் கோகன் பகுதிக்குள் அழைத்துச் சென்று அங்கு நீர்வீழ்ச்சியின் கீழ் சில அகோரி பயிற்சிகளை செய்யச்சொல்லியும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். இந்த வழக்கை மிகத்தீவிரமாக எடுத்துகொண்டுள்ளோம். சம்பந்தப்பட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக இந்த சடங்குகள் நடந்த சுடுகாட்டினை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். வழக்கில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். அதன் பிறகு கூடுதல் தகவல் கிடைக்கும். தற்போது இந்த வழக்கு துணை காவல் கண்காணிப்பாளரின் மேற்பார்வையில் விசாரணை நடைபெறும் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அனைவரும் படித்தவர்கள் என்றும், ஆனாலும் இதுபோன்ற மூடநம்பிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் போலீஸாஅர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x