Published : 12 Jan 2023 04:30 AM
Last Updated : 12 Jan 2023 04:30 AM
கடலூர்: விருத்தாசலம் வட்டம் மேல்பாப் பனப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம் (23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 17 வயது பள்ளி மாணவியுடன் செல்போனின் பேசி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 02.06.2020 அன்று அந்த மாணவியைப் பார்க்கவிரும்புவதாக கூறி, அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஓடை பகுதிக்கு அழைத்துள்ளார்.
ஆனால் அந்த மாணவி வர மறுத்துள்ளார். வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று முருகானந்தம் மிரட்டியதால், அன்று இரவு அந்த மாணவி ஓடைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்தமாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற் றோர் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.போலீஸார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார்.
அதில், முருகானந்தத்தின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 7 ஆண்டுசிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு கடலூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், தமிழகஅரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் இருந்து ரூ.4 லட்சத்தை இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக கலா செல்வி ஆஜரானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT