Published : 10 Jan 2023 04:10 AM
Last Updated : 10 Jan 2023 04:10 AM

ஈரோடு: 4 பேருக்கு விஷ மாத்திரை கொடுத்து கொலை செய்தவருக்கு 35 ஆண்டு சிறை

ஈரோடு: சென்னிமலை அருகே விஷ மாத்திரை கொடுத்து 4 பேரை கொன்றவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த கே.ஜி.வலசு பெருமாள்மலை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் (75). இவருடைய மனைவி மல்லிகா (58). இவர்களது மகள் தீபா (30). இவர்களது தோட்டத்தில் வேலை செய்து வந்தவர் குப்பம்மாள் (65). இதே தோட்டத்தில் வேலைபார்த்து வந்த கல்யாணசுந்தரம் (43) என்பவர், சபரி (22) என்பவர் உதவியோடு, கரோனா தடுப்பு மாத்திரைகள் எனக்கூறி, நால்வருக்கும் விஷ மாத்திரைகளைக் கொடுத்துள்ளார்.

இதனை சாப்பிட்ட கருப்பணன், அவருடைய மனைவி மல்லிகா, இவர்களது மகள் தீபா மற்றும் வேலையாள் குப்பம்மாள் ஆகிய நால்வரும் இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னிமலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, சபரி உதவியுடன், விஷ மாத்திரைகளைக் கொடுத்து கல்யாண சுந்தரம் நால்வரையும் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, கல்யாண சுந்தரம் மற்றும் சபரி ஆகியோரைக் கைது செய்தனர். கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த சம்பவம் நடந்தது. ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட கல்யாண சுந்தரத்திற்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தார். சபரிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x