Published : 09 Jan 2023 07:33 AM
Last Updated : 09 Jan 2023 07:33 AM
விருதுநகர்: விருதுநகர் கட்டையாபுரத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ்(42). இவர் பாஜக சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவராக உள்ளார்.
இவர், அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரியை மொபைல் போன் மூலம் பதிவிறக்கம் செய்து ஆன்லைனில் விற்பனை செய்வதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, அவரது வீட்டில் விருதுநகர் பஜார் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அவர் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்வது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து பிரான்சிஸை கைது செய்தனர். ஆன்லைன் லாட்டரி விற்றதாக இவர் மீது ஏற்கெனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment