Published : 09 Jan 2023 07:31 AM
Last Updated : 09 Jan 2023 07:31 AM

விருதுநகர் கள்ளநோட்டு வழக்கில் பெண் உட்பட மேலும் 4 பேர் கைது

விருதுநகர்: விருதுநகர் கள்ள நோட்டு வழக்கில் பெண் உட்பட மேலும் 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். சிவகாசி அருகே உள்ள வேண்டுராயபுரத்தைச் சேர்ந்தவர் சுப்புத்தாய் (56). இவர் விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் பஞ்சவர்ணம் என்பவரது பழக் கடையில் நேற்று முன்தினம் பழங்கள் வாங்கினார். அப்போது போலி 500 ரூபாயை மாற்ற முயன்ற அவரை விருதுநகர் மேற்கு போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 எண்ணிக்கையிலான போலி 500 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.

விசாரணையில் போலி 500 ரூபாய்த்தாளை அவரது மகளான துரைசெல்வி(36) என்பவரிடம் இருந்து வாங்கியதாகத் தெரிவித்தார். இந்த தகவலின்பேரில் துரைசெல்வியிடம் இருந்து 59 போலி 500 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும் விசாரணையில், துரைசெல்வி தனது தங்கையின் கணவர் பாலமுருகனிடம் இருந்து போலி ரூபாய் நோட்டுகள் வாங்கியதாக தெரிவித்தார். அதையடுத்து, பாலமுருகனிடம் இருந்து 50 போலி 500 ரூபாய்கள் கைப்பற்றப்பட்டன.

தொடர்ச்சியாக பாலமுருகன் சிவகாசியைச் சேர்ந்த அருண் என்பவரிடம் போலி ரூபாய் நோட்டுக்கள் பெற்றதாக அளித்த தகவலின் அடிப்படையில் அருணிடம் இருந்து 400 போலி 500 ரூபாய் நோட்டுக்களைப் போலீஸார் கைப்பற்றினர்.

அருண் அளித்த தகவலின்பேரில் சிவகாசியைச் சேர்ந்த நவீன்குமார் என்பவரிடம் இருந்து 557 போலி 500 ரூபாய் நோட்டுக்களும், அவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்திய உபகரணங்களான மை, லேப்டாப், இரு கலர் பிரிண்டர்கள், பேப்பர் ஆகியற்றையும் விருதுநகர் மேற்கு போலீஸார் நேற்று மாலை பறிமுதல் செய்தனர்.

மகள், மருமகன் கைது: இந்த வழக்கில் சுப்புத்தாயைத் தொடர்ந்து அவரது மூத்த மகள் துரைசெல்வி, இளைய மருமகன் பாலமுருகன், அருண், நவீன்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x