Published : 02 Jan 2023 04:13 AM
Last Updated : 02 Jan 2023 04:13 AM
விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் 3 நபர்கள் பெட்ரோல் பங்கில் வந்து ரூ.50-க்கு பெட்ரோல் வாங்கிக் கொண்டு, கூகுள் பே மூலம் ரூ.200 பணம் போடுகிறேன், மீதி ரூ.150 கொடுங்கள் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு சம்மதித்த ஊழியர்கள், தொகையை கூகுள் பே மூலம் போடச் சொல்லியுள்ளனர். பின்னர் அவர்கள் ரூ.200 செலுத்தியதாக கூறியுள்ளனர். ஆனால் பணம் வராததால் ரூ.50-ஐ மட்டும் செலுத்துமாறு கூறப்பட்டது. இதனால் பெட்ரோல் பங்க் ஊழியரான மாற்றுத் திறனாளியான ஜெயராஜூக்கும், பெட்ரோல் வாங்க வந்த நபர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
வாய் தகராறு கைகலப்பாக மாறியதால், 3 பேரும் சேர்ந்து ஜெயராஜை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் காயமடைந்தார். இது குறித்து ஜெயராஜ் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து வசந்த், அப்துல் அமீது, சித்திக் அலி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT