Published : 27 Dec 2022 07:26 AM
Last Updated : 27 Dec 2022 07:26 AM
வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சாலையூர் நால்ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது மனைவி கலையரசி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு சீனிவாசன் வெளியில் சென்றிருந்த நிலையில், வீட்டுக்குள் புகுந்த முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட கும்பல், குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து, கலையரசியை மிரட்டினர். பின்னர், பீரோவிலிருந்த 43 பவுன் நகை, ரூ.18 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது கலையரசி வைத்திருந்த மொபைல் போனையும் பறித்துச் சென்றனர்.
திண்டுக்கல் டிஐஜி ரூபேஸ் குமார் மீனா, வேடசந்தூர் டிஎஸ்பி துர்காதேவி ஆகியோர், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வர வைழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. வேடசந்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இன்ஸ்பெக்டர் பால முருகன் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT