Published : 24 Dec 2022 06:08 AM
Last Updated : 24 Dec 2022 06:08 AM
புதுச்சேரி: புதுச்சேரி அருகே அரசு கையகப்படுத்திய இடத்தில் ஆயிரக்கணக் கில் மரங்கள் வெட்டி கடத்தப் பட்டுள்ளன. இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி அடுத்த கரசூரில் சிறப்பு பொருளாதார மண்டலத் திற்காக, புதுச்சேரி அரசால் கடந்த2007-ல் 800 ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டது. அங்கு எந்த தொழிற் சாலையும் வரவில்லை. இங்குமரங்கள் ஏராளமாக வளர்ந்துள்ளன. தற்போது இப்பகுதியில் நூறு ஏக்கரில் மருத்துவ பூங்கா அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது.
இச்சூழலில் கரசூரில் அரசு கையகப் படுத்தியுள்ள இடத்தில் உள்ள மரங்களை வெட்டுவதாக வனத் துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு வெட்டப்பட்ட மரங்கள், டிராக்டர்கள் ஆகிய வற்றை வனத்துறையினர் பறி முதல் செய்தனர்.
இந்நிலையில் நேற்று வனத் துறை துணை வனக்காப்பாளர் வஞ்சுளவள்ளி தலைமையில் வன அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர், வெட்டப்பட்ட மரங்கள்உள்ள பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர். வெட்டப்பட்ட மரங்களை கணக்கெடுக்க நம்பர் போடும் பணியைத் தொடங் கினர்.
இதுகுறித்து வனத்துறை தரப்பில் விசாரித்தபோது, "15 நிமிடத்துக்கு 50 மரங்கள் என்ற அடிப்படையில் எண்களை குறிப்பிட்டோம். அதன்படி ஆயிரக்கணக்கில் மரங்கள் வெட்டப்பட்டிருக் கலாம் என கருதுகிறோம் " என்றனர். வெட்டப்பட்ட மரங்கள் எங்கு எடுத்து செல்லப்பட்டன என்பது குறித்தும் துணை வனக்காப்பாளர் தலைமையில் விசாரணை நடந்தது. விசாரணையில், கொதிகலன்கள் உள்ள தொழிற்சாலைகளுக்கு மரங்களை எடுத்து சென்றதாக சுற்றி யுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து அருகில் உள்ள சேதராப்பட்டு தொழிற்சாலை களுக்கு காவல் துறையினருடன், வனத்துறை துணை வனக் காப்பாளர் வஞ்சுளவள்ளி தலைமையில் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர்.
அங்கு சில தொழிற்சாலைகளில் புதிதாக வெட்டப்பட்ட மரங்கள் இருந்தன. இவை அனைத்தும் ஏஜென்ட்டுகள் மூலமே பெறப்படுவதாக தொழிற்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பதிலில் திருப்தியடையாத அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்த வருவோம் எனக் கூறி புறப்பட்டனர்.
இதுகுறித்து துணை வனகாப் பாளர் வஞ்சுளவள்ளியிடம் கேட்ட தற்கு, "அரசு கட்டுப்பாட்டிலுள்ள இடங்களில் உள்ள மரங்களை வெட்டி எடுத்து போவதாக புகார் வந்தது. அதையடுத்து ஆய்வு செய்யவந்தபோது மரங்கள் வெட்டப் பட்டது தெரிந்தது. இங்கு தேக்கு,சந்தனம் உள்ளிட்ட மரங்கள் இருப்பதாக தெரிகிறது.
வெட்டப்பட்ட மரங்களை எண்ணி வருகிறோம்.விசாரணை நடந்து வருகிறது. அதன் பிறகே முழுமையாக தெரிவிக்க முடியும்" என்று குறிப்பிட்டார். காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "இப்பகுதியைச் சேர்ந்த மூவர்தான் இவ் விவகாரத்தில் ஈடுபட்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந் துள்ளது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT