Published : 24 Dec 2022 06:12 AM
Last Updated : 24 Dec 2022 06:12 AM

புதுச்சேரி | பஞ்சர் ஒட்டும் பேஸ்ட் மூலம் சிறார்களுக்கு போதை ஏற்றியவர் கைது: 5 குழந்தைகள் மீட்பு

புதுச்சேரி: புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் ஒருவர் பஞ்சர் ஒட்டும் பேஸ்ட்டை பாலிதீன் கவரில் வைத்து, குழந்தைகளை நுகர செய்து போதை ஏற்றிய வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைதளத்தில் பரவியது. போலீஸார் விசாரணையில் லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த சிரஞ்சீவி(33) என்பவர் குழந்தைகளுக்கு இப்படி போதை ஏற்றியது தெரியவந்தது.

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கடற்கரை அருகே சிரஞ்சீவியை கைது செய்தனர். விசாரணையில், சிரஞ்சீவி தன்னுடைய குழந்தைகள் மற்றும் உறவினர்களின் குழந்தைகளுக்கு பஞ்சர் ஒட்டும் பேஸ்டை பாலிதீன் கவரில் வைத்து நுகர செய்து போதை ஏற்றியுள்ளார். அவர்களை பேப்பர், பாட்டில் சேகரிக்கவும், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பிச்சை எடுக்கவும் பயன்படுத்தி அதன் மூலம் வருமானம் பார்த்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் தெரிவித்த தகவலின் பேரில் 6,8,11 உள்ளிட்ட வயதுடைய 5 குழந்தைகளை போலீஸார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் சிரஞ்சீவியை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக சிறப்பாக செயல் பட்ட உருளையன்பேட்டை போலீஸாரை புதுச்சேரி சீனியர் எஸ்பி தீபிகா, எஸ்பி (கிழக்கு) சுவாதி சிங் ஆகியோர் பாராட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x