Published : 20 Dec 2022 07:45 AM
Last Updated : 20 Dec 2022 07:45 AM
சென்னை: என்ஐஏ அதிகாரி என கூறி வியாபாரியிடம் ரூ.20 லட்சம் பறித்துச் சென்ற வழக்கு தொடர்பாக 6 பேர் சரணடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அப்துல்லா (36), மாலிக் (34), செல்லா (35), சித்திக் (35). இவர்கள் கூட்டாக சென்னை மண்ணடி மலையப்பன் தெருவில் வீடு எடுத்து தங்கி பர்மாபஜாரில் செல்போன் கடை வைத்துள்ளனர். மொத்தமாக செல்போனை வாங்கி விற்பனையும் செய்கின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் மண்ணடியில் உள்ள அப்துல்லா வீட்டுக்கு 6 பேர் கொண்ட கும்பல்தங்களை என்ஐஏ அதிகாரிகள்என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். பின்னர் வீட்டிலிருந்த ரூ.10 லட்சம், கடைக்கு அழைத்துச் சென்று ரூ.10 லட்சம் என ரூ.20 லட்சம் ரொக்கத்தை பறித்து சென்றுள்ளனர்.
அதன் பின்னர்தான் வந்தது அதிகாரிகள் அல்ல, வழிப்பறி கும்பல்என்பது அப்துல்லாவுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உதவி ஆணையர் வீரகுமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், என்ஐஏ அதிகாரிகள் என அப்துல்லாவிடம்இருந்து ரூ.20 லட்சத்தை பறித்துச் சென்ற வழக்கு தொடர்பாக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் 6 பேர் நேற்று சரண்அடைந்தனர்.
இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, “பாஜகவைச் சேர்ந்தவட சென்னை பகுதி நிர்வாகியானவேலு என்ற வேங்கை அமரன், அவரது கூட்டாளிகள் ரவி, விஜயகுமார், தேவராஜ், புஷ்பராஜ், கார்த்திக் ஆகியோர் சரணடைந்துள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரித்தால் பணம் பறிப்பின் முழு பின்னணியும் தெரியவரும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT