Published : 05 Dec 2022 06:21 PM
Last Updated : 05 Dec 2022 06:21 PM
திருப்பூர்: காவலரைப் பார்த்து சட்டையை கழற்றி வைத்துவிட்டு, ’ஒத்தைக்கு ஒத்தை வா’ என தரக்குறைவாக பேசிய பாஜக பிரமுகரை காங்கேயம் போலீஸார் கைது செய்தனர்.
தாராபுரம் - காங்கேயம் நோக்கி அரசுப் பேருந்தில், போலீஸாருக்கும், பாஜக நிர்வாகிக்கும் இடையே பிரச்சினை எழுந்தது. இதையடுத்து இருதரப்பினரும் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு சென்று போலீஸ் அதிகாரிகள், இரு தரப்பிலும் விசாரிக்கையில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது.
பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகன், நகரத் தலைவர் சிவபிரகாஷ் உட்பட சில நிர்வாகிகள் சிலருடன் சேர்ந்து கொண்டு பாஜக மாவட்ட செயலாளர் ராஜா, அங்கிருந்த ரமேஷ் என்ற போலீஸாரை ஒருமையில் பேசியதால் வாக்குவாதம் முற்றியது.
மேலும், ‘சட்டையை கழற்றி வைத்துவிட்டு வா, ஒத்தைக்கு ஒத்தை பாக்கலாம்’ என தரக்குறைவாக பேசியதால், பரபரப்பு ஏற்பட்டது. அங்கு திரண்ட சக போலீஸார் இருதரப்பையும் சமாதானப்படுத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில். காவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக செயலாளர் ராஜா (38) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT