Published : 03 Dec 2022 06:13 AM
Last Updated : 03 Dec 2022 06:13 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஏகாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மகளின் திருமணம், கடந்த செப்டம்பர் 8-ம் தேதி திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
அப்போது, பெண் ஒருவர் உறவுக்காரர் என்று கூறி மணமகள் அறைக்குச் சென்று, 15 பவுன் தங்க நகையை திருடி சென்றது தெரியவந்தது. அதேபோல், மணவாளநகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடந்த போளிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மகன் திருமண விழாவிலும் 11 பவுன் நகை திருடுபோனது.
இதுகுறித்த புகாரின்பேரில் திருவள்ளூர் டவுன் போலீஸார் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற தில் சாந்திதான் இந்த இரு திருமண மண்டபங்களிலும் நகை, பணம் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, நேற்று அவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், திருமண மண்டபங்களில் திருடிய நகைகளை ஆவடியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.4 லட்சத்துக்கு அடகு வைத்திருப்பதாக தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, தில் சாந்தியை திருவள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment