Published : 30 Nov 2022 06:22 AM
Last Updated : 30 Nov 2022 06:22 AM

மின் கட்டண மோசடி: ரூ.1.29 லட்சத்தை இழந்த முன்னாள் ராணுவ வீரர்

கோப்புப்படம்

பஞ்ச்குலா: ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா நகரத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ கர்னல் குர்கிரத் சிங் (62). இவரது மொபைல் போனுக்கு அக்.16-ம் தேதி குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், கடந்த மாதம் செலுத்த வேண்டிய மின் கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை. உடனடியாக கட்டணத்தை செலுத்தாவிட்டால் இன்றிரவே மின்சாரம் துண்டிக்கப்படும். உடனே இந்த மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து பதற்றமடைந்த குர்கிரத் சிங் குறுஞ்செய்தியில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டார். எதிர்முனையில் பேசிய நபர் மின்துறை அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். ஏற்கெனவே மின் கட்டணத்தை செலுத்தியதாக கூறிய ராணுவ வீரரிடம் குயிக்கர் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ராணுவ வீரரின் வங்கிக் கணக்கு விவரங்களை மர்ம நபர் நைசாக பேசி வாங்கிய சிறிது நேரத்தில் கர்னலின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.30,000, ரூ.99,000 அடுத்தடுத்து எடுக்கப்பட்டது. இதையடுத்து, அதிர்ச்சியடைந்த ராணுவ வீரர் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, அந்தமர்ம நபர் மீது ஐபிசி 419 மற்றும் 420 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து பஞ்ச்குலா போஸீஸார், சந்தேகத்துக்குரிய இணைப்பு (லிங்க்), அழைப்புகளை தவிர்ப்பதுடன், வங்கிக் கணக்கு விவரங்களையாருடனும் பகிந்து கொள்ளக் கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x