Published : 30 Nov 2022 04:05 AM
Last Updated : 30 Nov 2022 04:05 AM
திருப்பூர்: அவிநாசி வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசிகவுண்டன்புதூர் ஆதிதிராவிடர் காலனியில் வசிப்பவர் சந்தியா (27). அதே பகுதியில் வசித்து வருபவர் அருள்குமார் (33). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
அருள்குமார், அவிநாசி காவல் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக காவலராக பணியாற்றி வந்தார். சந்தியாவுக்கும், அருள்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், கடந்த 26-ம் தேதி வாக்குவாதம் எழுந்தது. இதில் சாதிப்பெயரை சொல்லி காவலர் அருள்குமார் திட்டியுள்ளார். இதில் சந்தியா விஷம் அருந்தி மயக்கமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சந்தியா அனுமதிக்கப்பட்டார்.
அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளர் பவுல்ராஜ் உத்தரவின் பேரில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, காவலர் அருள்குமாரை அவிநாசி போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் துறை சார்ந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக காவலர் அருள்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT