Published : 07 Nov 2022 07:26 AM
Last Updated : 07 Nov 2022 07:26 AM

ஆவடி | முதல்வர், பட்டியலின மக்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டவர் கைது

கைது செய்யப்பட்ட பூபதி

ஆவடி: தமிழக முதல்வர் மற்றும் பட்டியலின மக்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியது தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அருகே உள்ள கொசவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி (32). இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளம் ஒன்றில் பதிவிட்ட வீடியோவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், பட்டியலின மக்கள் குறித்து, கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி அவதூறாக பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது, அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, திமுகவின் திருவள்ளூர் மத்திய, கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரேம் ஆனந்த் திருநின்றவூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், பட்டாபிராம் காவல் உதவி ஆணையர் சதாசிவம் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நேற்று முன்தினம் இரவு பூபதியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x