Published : 29 Oct 2022 07:29 AM
Last Updated : 29 Oct 2022 07:29 AM
சென்னை: சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் சர்மா. இவரது 12 வயது மகன் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், தனது மகன்கடத்தப்பட்டதாகவும், பின்னர் அவர்களிடமிருந்து தப்பி வந்ததாகவும் அரவிந்த் சர்மா, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட சிறுவனிடம் போலீஸார் மீண்டும் விசாரித்தனர். அப்போது, அரையாண்டுத் தேர்வுக்குப் பயந்து,மாணவர் கடத்தல் நாடகமாடியது அம்பலமானது. கடத்தல் நாடகமாடினால் பெற்றோர் பள்ளிக்கு மீண்டும் அனுப்ப மாட்டார்கள் என்று எண்ணி, தான் கடத்தப்பட்டதாக வீட்டுக்குத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கடத்தல் நாடகம் ஆடிய சிறுவனை போலீஸார் எச்சரித்து, அனுப்பிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT