Published : 25 Oct 2022 01:03 PM
Last Updated : 25 Oct 2022 01:03 PM

அமெரிக்கா | உயிருடன் புதைக்கப்பட்ட பெண்: உயிர்காத்த ஆப்பிள் வாட்ச்

பிரதிநிதித்துவப்படம்

வாஷிங்டன்: அமெரிக்க நாட்டில் கணவரால் உயிருடன் புதைக்கப்பட்ட பெண் ஒருவரின் உயிரை ஆப்பிள் வாட்ச் காத்துள்ளது. கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரை போலீஸார் மீட்டுள்ளனர். அது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் முக்கியமான மெசேஜ்கள், நோட்டிபிகேஷன், தொலைபேசி அழைப்புகள் போன்றவற்றை பயனர்கள் அறிந்து கொள்ள உதவுகிறது ஸ்மார்ட்வாட்ச். அதோடு இதய துடிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் ஆரோக்கிய நலன் சார்ந்த தகவல்களையும் இந்த ஸ்மார்ட்வாட்ச்கள் வழங்கி வருகின்றன. அதில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் பணி கொஞ்சம் ஓவர் டைமாக உள்ளது.

ஆப்பிள் வாட்ச்சை பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு பல்வேறு சமயங்களில் அந்த வாட்ச் தனது பணியை சரியாக செய்து வருகிறது. இதில் சில அவசர நேரங்களில் நடந்தவை. அப்படி ஒன்று தான் அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் நடைபெற்றுள்ளது. கணவரால் தாக்கப்பட்டு, கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு, உயிருடன் புதைக்கப்பட்ட 42 வயதான பெண் ஒருவரை ஆப்பிள் வாட்ச் காத்துள்ளது.

அந்த பெண் எப்படியோ அந்த குழியில் இருந்து வெளிவந்துள்ளார். பின்னர் ஆப்பிள் வாட்ச்சை பயன்படுத்தி அவசர உதவி எண்ணுக்கு போன் செய்துள்ளார். அந்த தகவலை பெற்ற போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணை காத்துள்ளனர். அந்த பெண்ணின் 20 வயது மகளுக்கும் நோட்டிபிகேஷன் அனுப்பியுள்ளது ஆப்பிள் வாட்ச். அந்த வாட்சை சம்மட்டியால் அடித்துள்ளார் அவரது கணவர். இருந்தும் அது தனது பணியை செய்துள்ளதாக தகவல் உள்ளது. இதே போல கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறுமி ஒருவர் கேன்சர் நோய் பாதிப்புக்கு ஆளானது குறித்தும், மற்றொரு பெண் கருவுற்று இருக்கும் தகவலையும் ஆப்பிள் வாட்ச் கண்டறிந்து இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x