Published : 06 Oct 2022 07:36 AM
Last Updated : 06 Oct 2022 07:36 AM
கடலூர்: சிதம்பரத்தைச் சேர்ந்தவர் பத்ரிசன்(19). இவருக்கும், 7-ம் வகுப்பு சிறுமிக்கும் சிதம்பரத்தில், கடந்தாண்டு ஜன.25-ல்
திருமணம் நடந்துள்ளது. இந்த சிறார் திருமணம் குறித்து கடலூர் சமூக நலத்துறைக்கு புகார் சென்றது. அதன் பேரில் அதிகாரிகள் சிதம்பரம் வந்து விசாரணை நடத்தினர். இதில் குழந்தை மணம் நடந்தது உறுதியானது. இதுகுறித்து சமூக நலத்துறை மகளிர் ஊர் நல அலுவலர் சித்ரா, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பத்ரிசன், அவரது தந்தை தில்லை நாகரத்தினம் தீட்சிதர், தாயார் சித்ரா, சகோதரர் சூர்யா தீட்சிதர், சிறுமியின் தந்தை, சிறுமியின் தாய் ஆகிய 6 பேர் மீது நேற்று முன்தினம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் சூர்யா தீட்சிதரை கைது செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment