Published : 06 Oct 2022 06:38 AM
Last Updated : 06 Oct 2022 06:38 AM
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக ரூ.20 லட்சம் மதிப்பில் சொத்து குவிப்பில் ஈடுபட்ட சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் முன்னாள் காசாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் காசாளராக பணியாற்றியவர் சத்யநாராயணன்(70).
இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்தப் புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், கடந்த 1997 முதல் 2006 வரை தனது பெயரிலும், தனது மகன்கள் ராமன்(40), லட்சுமணன்(40) ஆகியோரது பெயர்களிலும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.20 லட்சம் மதிப்பில் சொத்துகளை சேர்த்துள்ளதாகக்கூறி அவர்கள் மூவர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 2007-ம் ஆண்டு வழக்குபதிவு செய்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பை: குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த சென்னை ஊழல் தடுப்புசிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ், முன்னாள் காசாளரான சத்யநாராயணனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், அவரது மகன் லட்சுமணனுக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். மேலும், கிண்டியில் லட்சுமணன் பெயரில் உள்ள 750 சதுர அடி கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பை மேல்முறையீட்டுக்காலம் முடிவடைந்ததும் அரசுடைமையாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT