Published : 30 Sep 2022 04:25 AM
Last Updated : 30 Sep 2022 04:25 AM

ராமநாதபுரம் பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.2.47 லட்சம் மோசடி

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஓரிவயல் சாந்திபுரத்தைச் சேர்ந்த மைலிகான் மனைவி சீதா(30). இவர் கடன் அப்ளிகேஷனில் பணம் வாங்கி திருப்பிச் செலுத்தி வந்தார்.

கடந்த ஜூன் 9-ல் ஒரு அப்ளிகேஷனில் கடன் பெற பதிவி றக்கம் செய்தார். விண்ணப்பிக்கும் முன்பே இவரது வங்கிக் கணக்கில்

ரூ.2,275 வரவானது. இதையடுத்து ஜூன் 15 அன்று அவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றுவதாக குறுந்தகவல் வந்தது.

இதைத்தொடர்ந்து அந்த அப்ளிகேஷனில் மேலும் கடன் பெற்று ஆன்லைன் மூலம் பணத்தை திருப்பிச் செலுத்தி வந்தார். ஆனால் அவருக்கு நாளுக்கு நாள் கடன் அதிகமாகிக் கொண்டே சென்றது.

அவரால் பணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்ப ட்டது. இந்நிலையில் அவரது எண்ணைத் தொடர்பு கொண்ட நபர் பணத்தை திருப்பிச் செலுத்தாததால் அவரது புகைப்படத்துடன் ஆபாச மாக வெளியிடப்போவதாக மிரட்டினார்.

அதற்காக கேட்ட பணத்தை கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனால் பயந்துபோன சீதா, தனது உறவினர்களிடம் பணம் பெற்று ரூ.2,47,999 ஆன்லைன் மூலம் செலுத்தினார்.

அதன்பின்னரும் அந்த நபர் சீதாவின் படத்தை ஆபாசமாக சித்தரித்து, அவரது வாட்ஸ்அப் கணக்கில் உள்ள அவரது கணவர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதனால் போலியான கடன் அப்ளிகேஷன் உருவாக்கி தன்னை ஆபாசமாக சித்தரித்து பணத்தை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீதா, தேசிய சைபர் கிரைமில் புகார் செய்தார். ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x