Published : 14 Sep 2022 04:35 AM
Last Updated : 14 Sep 2022 04:35 AM

ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த இளைஞர்: விரைவாக செயல்பட்டு மீட்டெடுத்த திருப்பத்தூர் சைபர் க்ரைம்

ஆன்லைன் விளம்பரத்தை நம்பி ரூ.17 ஆயிரம் பணத்தை இழந்த வாணி யம்பாடி இளைஞரிடம் மீட்டெடுத்த பணத்தை நேற்று வழங்கிய திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன். படம்:ந.சரவணன்.

திருப்பத்தூர்

ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்த வாணியம்பாடி இளைஞருக்கு திருப்பத்தூர் சைபர் க்ரைம் காவல் துறையினர் பணத்தை மீட்டு கொடுத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் ஆலங் காயம் பகுதியைச் சேர்ந்தவர் இம்தியாஸ்பாட்சா (21). இவர், கடந்த மாதம் யூடியூப் சேனலை பார்த்துக் கொண்டிருந்த போது குறைந்த விலையில் செல்போன் விற்பனை செய்வதாக அதில் வெளியான விளம்பரத்தை பார்த்தார்.

அந்த விளம்பரத்தில் இருந்த தொலைபேசி எண்ணுக்கு இம்தி யாஸ்பாட்சா தொடர்பு கொண்டு பேசியபோது, விளம்பர தரப்பில் இருந்து, விலை உயர்ந்த ஐ போன் குறைந்த விலையில் விற்பனை செய்வதாகவும், அதற்கான பணம் செலுத்தினால் வீட்டு முகவரிக்கு உடனடியாக ஐ போன் அனுப்பி வைக்கப்படும் என்றும், இந்த சலுகை குறுகிய காலத்துக்கு மட்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதனை உண்மையென நம்பிய இம்தியாஸ்பாட்சா உடனடியாக தனது வங்கி கணக்கில் இருந்து மோசடி நபர் கொடுத்த யுபிஐ நம்பருக்கு ரூ.17 ஆயிரம் பணத்தை அனுப்பினார்.

இதனையடுத்து, ஒரு வாரத்துக்கு மேலாகியும் பார்சல் வரவில்லை. இதனால், இம்தி யாஸ்பாட்சா அந்த விளம்பரத்தில் இருந்த தொலைபேசி எண்ணுக்கு மீண்டும் தொடர்பு கொண்டபோது, அந்த எண் அணைத்து வைக்கப் பட்டிருப்பதும் தான் ஏமாற்றப் பட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து திருப்பத்தூர் சைபர் க்ரைம் காவல் துறை யினரிடம் இம்தியாஸ்பாட்சா புகார் அளித்தார். அதன்பேரில் சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் மூலம் மோசடி செய்த நபரிடம் இருந்து இம்தியாஸ்பாட்ஷா இழந்த பணத்தை மீட்டனர்.

இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன், வாணி யம்பாடி இளைஞர் இம்தியாஸ் பாட்சாவை நேரில் அழைத்து அவர் இழந்த பணத்தை நேற்று வழங்கினார்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பால கிருஷ்ணன் கூறும்போது, ‘‘பொது வாக பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட விஷயங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தொலைபேசி எண்ணில் அறிமுகம் இல்லாத நபர்கள் வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன், தொழில் கடன், சுய உதவிக்குழுக்கடன் என பல்வேறு வகைகளில் விளம்பரம் செய்து மோசடி செய்கின்றனர். அவர்களிடம் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

ஆன்லைன் பண மோசடி நடந்தால் 1930 என்ற சைபர் கிரைம் ஹெல்ப் லைன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆன்லைன் மூலம் பணம் இழந்திருந்தால் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கும் சைபர் கிரைம் காவல் துறையினரை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x