Published : 08 Sep 2022 07:39 AM
Last Updated : 08 Sep 2022 07:39 AM
திருப்பூர்: திருப்பூரில் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வந்த 17 வயது சிறுமி ஒருவர் 7 மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், இதுகுறித்து கொங்குநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீஸார் விசாரணைக்கு பிறகு, சிறுமியுடன் நட்பாக பழகி வந்த, பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் நெல்லை மாவட்டம் கீழப்புதூர் மாரிசெல்வம் (25), சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த திருமுருகன்பூண்டி காவல் நிலைய முதல் நிலைக் காவலர் யுவராஜா (36) ஆகியோரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT