Published : 13 Aug 2022 06:49 PM
Last Updated : 13 Aug 2022 06:49 PM
புதுடெல்லி: சுவரில் சிறுநீர் கழித்தற்காக நடந்த தகராறில், தெற்கு டெல்லியில் உள்ள மாலவியா நகரின் சந்தையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் இளைஞர் ஒருவர் வியாழக்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சி உதவியுடன் 4 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளானர்.
ஷாபூர் ஜாட் பகுதியில் வசித்து வந்தவர் மயங்க். ஹோட்டல் மேனஜ்மென்ட் படித்து வந்த இவர், குயிலா பேகம்பூர் பகுதியில் உள்ள சுவர் ஒன்றில் சிறுநீர் கழித்துள்ளார். அவரை குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் தாயார் கண்டித்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் அவரை அடித்தாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மனிஷ் என்பவர் தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு, மயன்க் மற்றும் அவரது நண்பர் விகாஸ் ஆகியோரை துரத்தியுள்ளார். தெற்கு டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் உள்ள பரபரப்பான சந்தைப் பகுதியில் மயன்கை துரத்திப் பிடித்த அந்தக் கும்பல், அவரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியது. சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட மயன்க் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவிகளில் பதிவாகியிருந்தது. அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் டெல்லி போலீசார் மனிஷ், ராகுல், ஆஷிஷ், சூரஜ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணத்தை அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT