Published : 06 Aug 2022 02:57 PM
Last Updated : 06 Aug 2022 02:57 PM

சென்னையில் சிறப்புச் சோதனை: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் இருவர் கைது 

காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை: சென்னையில் ரவுடிகளுக்கு எதிரான சிறப்புs சோதனையில் 2 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பெருநகரில், குற்றப் பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்கி, குற்றமில்லா சென்னை நகரமாக மாற்ற காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், ரவுடிகளுக்கு எதிரான சிறப்பு சோதனைகள் (Drive Against Rowdy Elements) மேற்கொண்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் குற்றப் பின்னணி நபர்களுக்கு எதிரான ஒரு சிறப்பு தணிக்கை உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் 5-ம் தேதியன்று சரித்திர பதிவேடு குற்றவாளிகள் (HS Rowdies) மற்றும் குற்றப் பின்னணி நபர்களுக்கு எதிரான சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில், நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி கொடுத்த 462 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கண்காணித்தும், நேரில் சென்று விசாரித்தும் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணித்து குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. குற்றவாளிகள், 29 சரித்திர பதிவேடு குற்றவாளிகளிடம் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், சட்டம், ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்த 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x