Published : 22 Jul 2022 06:06 AM
Last Updated : 22 Jul 2022 06:06 AM
சென்னை: டெல்லியைச் சேர்ந்தவர்கள் சாகிப் அஷ்ரப் (21), ஆதித்யா (21). இருவரும்ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரிவிடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வருகின்றனர்.
மாணவர்கள் இருவரும், கடந்த 19-ம்தேதி திருவேற்காடு காவேரி தெருவைசேர்ந்த வெங்கடேசன் (39) என்பவருக்கு சொந்தமான காரை வாடகைக்கு எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில், 20-ம் தேதி பூந்தமல்லி குத்தவாக்கம் குயின்ஸ் லேண்ட் அருகே சென்றபோது கார் விபத்தில் சிக்கியது. இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரித்தனர். அப்போது, இருதரப்பினரும் வழக்கு ஏதும் தேவையில்லை என தங்களுக்குள் பேசி, 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து முடித்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கல்லூரி மாணவர்கள் இருவரையும் விடுதியில் இருந்து வெங்கடேசன் வரவழைத்து காரில் கடத்திச் சென்று பூந்தமல்லி அருகே உள்ள ஓர் அறையில் தங்க வைத்து சரமாரியாக தாக்கி,சேதமடைந்த தனது காருக்கு இழப்பீடாக ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையறிந்த மாணவர்களின் உறவினர்கள் ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போலீஸார் விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக கடத்தப்பட்ட 2 மாணவர்களையும் மீட்டதோடு அவர்களை கடத்திய வெங்கடேசன் அவரது கூட்டாளிகள் 4 பேர் என 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment