Published : 04 Jul 2022 06:33 AM
Last Updated : 04 Jul 2022 06:33 AM

வேலூரில் குற்ற சம்பவங்களை தடுக்க 650 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் குற்றச்சம்ப வங்களை தடுக்க 650 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் பேரணாம் பட்டு வட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் கால்வாய் அமைக்கும் பணிகளையும், சாலை அமைக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள கழிவுநீர் கால்வாயை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி ஆணையர் அசோக்குமார், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி மற்றும் வட்டாட்சியர் செந்தில் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சி யர் குமாரவேல்பாண்டியன் கூறும்போது, ‘‘வேலூர் மாநகராட்சி பகுதியில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கால் வாயின் இருபுறமும் தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கால்வாய்களில் குப்பைக்கழிவுகளை கொட்டக் கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருவதுடன், இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.

வேலூர் மாநகராட்சி ஊழி யர்களும் கால்வாய்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் வாரத்துக்கு ஒரு முறை இதே போல் ஆய்வு நடத்தப்படும். பொதுமக்கள் யாரும் கால்வாய்களில் குப்பைக் கழிவுகளை கொட்டக் கூடாது. கால்வாய் மட்டும் அல்ல குடி யிருப்புப்பகுதிகள், வீதிகள் என எங்குமே குப்பைக்கழிவுகளை கொட்டக்கூடாது.

வேலூர் மாநகராட்சி, மாவட் டத்தில் குற்றங்களை தடுக்க கூடுத லாக 650 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. வேலூர் மாவட்டத்தையொட்டியுள்ள பாலாற்றுப்பகுதிகளில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.

அதற்கு ஏற்றார்போல ஏற் கெனவே ஒரு குற்றச் சம்பவமும் பாலாற்றுப்பகுதியில் நடந்துள்ளது. இதைக்கருத்தில் கொண்டு பாலாற்றுப்பகுதியில் 15 சிசிடிவி கேமரா பொருத்தப்படவுள்ளன. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் சாலை அமைக்கும்போது, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மீது சிமென்ட் சாலை மற்றும் தார்ச்சாலை அமைக்கப் பட்டுள்ளன.

அந்தப் பகுதியில் சாலையை தோண்டி புதிதாக சாலை அமைக்கப் பட்டுள்ளது. வாகனங்களை அப் புறப்படுத்தாமல் சாலை போட்ட ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக் காமல் சாலை அமைக்கும் பகுதியில் ஒரு நாள் முன்னதாக அந்த தெருவில் உள்ளவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

வேலூர் மாநகராட்சி பகுதியில் 2 காரணங்களுக்காக சில இடங் களில் சாலை அமைக்கும் பணி தாமதமாகி வருகிறது. வீடுகளுக்கு குழாய் இணைப்பு கொடுக்கும் பணிகள் முடிவடைந்தவுடன் அடுத்த 2 மாதங்களில் அனைத்து சாலைகளும் போடப்படும். கடந்த ஆண்டு அதிக அளவில் நீர்வரத்து இருந்த பகுதிகளில் ஆக்கிரமிப்பு கள் அகற்றப்பட்டு வருகின்றன. சேண்பாக்கம், கன்சால்பேட்டை பகுதியில் வசிக்கும் மக் களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெறும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x