Published : 12 Jun 2022 08:15 AM
Last Updated : 12 Jun 2022 08:15 AM
சேலம் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் கொண்டலாம்பட்டி கடத்தூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் மயில்சாமி (30). இவர் அரியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று குகை பகுதியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டார்.
இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து,எஸ்ஐ செல்வி வழக்குப் பதிவு செய்து, மயில்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுமியை சேலம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு அனுமதித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT