Published : 12 Jun 2022 04:00 AM
Last Updated : 12 Jun 2022 04:00 AM
தனது புகைப்படத்தை வைத்து மோசடியில் ஈடுபடும் மர்ம கும்பல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வருபவர் ஆல்பி ஜான் வர்கீஸ். இவரது புகைப்படத்தை வைத்து போலியான வாட்ஸ்-அப் கணக்கைத் தொடங்கி அதன்மூலம், அவர் கீழ் பணியாற்றும் அரசு அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பணம் கேட்டும், இணையதள லிங்கை அனுப்பி வைத்தும் அவர் பெயரில் மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபற்றி அறிந்த மாவட்ட ஆட்சியர், தனது சுயவிவரப் படத்தை வைத்து சமூக வலைதளங்களில் பணம் கேட்டு வரும் செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் மற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு நடந்தது போன்று தற்போது தனது புகைப்படத்தை வைத்து மர்ம கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் எனவே இதை யாரும் நம்ப வேண்டாம் எனவும் ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன், இது தொடர்பாக திருவள்ளூர் சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT