Published : 10 Jun 2022 05:39 PM
Last Updated : 10 Jun 2022 05:39 PM
புதுக்கோட்டை: பாலியல் வன்கொடுமையால் சிறுமிதற்கொலை செய்து கொண்ட வழக்கில் தாய் உட்பட 2 பேருக்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை கணேஷ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சூரியகலா (34). இவர் கணவரைப் பிரிந்துதனது 11 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். அதன்பின்பு, சேங்கன்தோப்பு பகுதியைச் சேர்ந்த கணேசன்(32) என்பவருடன் நட்பு ஏற்பட்டது.இந்நிலையில், சூரியகலாவின்மகளுக்கு தூக்க மாத்திரைகளைகுளிர்பானத்தில் கலந்துகொடுத்து, பாலியல் வன்கொடுமையில் கணேசன் ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பாக, தனது தாயிடம் கூறியும் கணேசனை அவர் கண்டிக்காததுடன், மகளையே திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த சிறுமி,கடந்த 2020-ல் வீட்டில் தூக்கிட்டுதற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கணேஷ்நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கணேசன், சூரியகலா ஆகியோரை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நீதிபதி ஆர்.சத்யாநேற்று தீர்ப்பளித்தார். அதில்,குற்றம்சாட்டப்பட்ட கணேசன், சூரியகலா ஆகியோருக்கு போக்ஸோ சட்டப் பிரிவின்கீழ் சாகும் வரை ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும், சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்காக தலா10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.
மேலும், தூக்க மாத்திரை பயன்படுத்திய குற்றத்துக்காக கணேசனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவித்தார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக யோகமலர் ஆஜரானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT