Published : 01 Jun 2022 06:17 AM
Last Updated : 01 Jun 2022 06:17 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே மறவமங்கலத்தைச் சேர்ந்தவர் சரவணன் (52). சவுதி அரே பியாவில் பணிபுரிந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய அவர் மாட்டு வண்டியில் மணல் அள்ளி கடத்தி வந்துள்ளார்.
மணலில் வண்டியை இழுக்க மாடு சிரமப் பட்டது. தான் சவுதி அரேபியாவில் வேலை செய்தபோது மணலில் ஒட்ட கங்கள் வேகமாகச் செல்வதை கவனித் துள்ளார். இதையடுத்து ராஜஸ்தான் மாநிலம் சென்ற சரவணன் அங்கிருந்து ஒரு ஆண் ஓட்டகத்தை விலைக்கு வாங்கி வந்துள்ளார்.
பிறகு அதை பழக்கப்படுத்தி தினமும் மணல் கடத்தி வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஒட்டக வண்டியில் மணல் அள்ளி வந்தபோது ரோந்து சென்ற மறவமங்கலம் போலீஸார் அவற்றை பறிமுதல் செய்தனர். ஆனால், தொடர்ந்து ஒட்டகத்துக்கு உணவளிக்க முடிய வில்லை. இதையடுத்து, ஒட்டகத்தை உரியவரிடமே ஒப்படைத்தனர். மேலும் மணல் கடத்தல் குறித்து தொடர்ந்து விசா ரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT