Published : 07 May 2022 01:40 AM
Last Updated : 07 May 2022 01:40 AM
திருப்பூர்: ரூ 9 லட்சம் லஞ்சம் பெற்ற திருப்பூர் வணிகவரித்துறை அலுவலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
திருப்பூர் குமரன் சாலையில் வணிகவரித்துறை 2-ம் மண்டல அலுவலகம் உள்ளது. இதில் வணிகவரித்துறை அலுவலராக பணியாற்றுபவர் ஜெயகணேஷ் (44). கோவையை சேர்ந்தவர் குணசேகரன். இவர் ரிக் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவர் திருப்பூரில் கடந்த 2011- 17-ம் ஆண்டு வரை நிறுவனத்தை நடத்தி வந்தார். தொடர்ந்து நிறுவனத்தை திருப்பூரில் நடத்த முடியாத நிலை குணசேகரனுக்கு ஏற்பட்டதால், நிறுவனத்தை மூடினார். அதற்கு ஜிஎஸ்டி வரி உள்ளிட்டவை அடங்கிய வணிக வரித்துறை அலுவலகத்தில் படிவம் சி-ஐ சமர்பித்து, வங்கியில் பணம் செலுத்த வேண்டும். இதற்கு தடையின்மை சான்று அளிக்க வேண்டும்.
இந்த தடையின்மை சான்றுக்காக வணிக வரித்துறை அலுவலர் ஜெயகணேஷ் ரூ.9 லட்சம் கேட்டுள்ளார். இதையடுத்து குணசேகரன் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் குணசேகரன் இன்று லஞ்ச பணத்தை ஜெயகணேஷூக்கு தந்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்து பல மணி நேரம் அவரிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT