Published : 01 May 2022 04:15 AM
Last Updated : 01 May 2022 04:15 AM

சேலம் | வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்களிடம் ரூ.2.14 லட்சம் மோசடி

சேலம்

சேலத்தில் பெண்களிடம் வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறி ரூ.2.14 லட்சம் மோசடியில் ஈடுபட்டவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் மணிமலர். இவரது செல்போனுக்கு கடந்த 2020-ம் ஆண்டு குறுஞ்செய்தி வந்தது. அதில், பெங்களூருவில் உள்ள தனியார் தேநீர் நிறுவனத்துக்கு ஆட்கள் தேவை என தெரிவிக்கப்பட்டிருந்தது. தகவலில் கொடுக்கப் பட்டிருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு மணிமலர் பேசினார். அதில் பேசிய செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த சசிகுமார் கொண்டையன் (40) என்பவர், தேநீர் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை இருப்பதாகவும், இதற்கு பணம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய மணிமலர் மற்றும் அவரின் தோழிகளான மேகலா, பரமேஸ்வரி ஆகியோர் சேர்ந்து ரூ.2.14 லட்சத்தை சசிகுமார் கொண்டையனிடம் கொடுத்தனர். ஆனால் அவர் கூறியபடி 3 பேருக்கும் வேலை வாங்கித் தரவில்லை.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடாவிடம் கடந்த 28-ம் தேதி புகார் அளித்தனர். அதன்பேரில் சைபர் கிரைம் பிரிவு போலீஸார் சசிகுமார் கொண்டையனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x