Published : 20 Mar 2022 11:31 AM
Last Updated : 20 Mar 2022 11:31 AM
ஈரோடு: ஈரோட்டில் வீட்டில் 232.5 கிலோ கஞ்சா பதுக்கிய வழக்கில் 10 மாதங்களாக தலைமறைவாக இருந்த வழக்கறிஞர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு சோலார் வசந்தம் நகர் கோல்டன் சிட்டி ஹரி கார்டனில் கடந்த ஆண்டு மே மாதம் 23ம் தேதி வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக மணி மகன் கேசவன்(34), அவரது மனைவி பிருந்தா(24) ஆகிய இருவரையும் ஈரோடு தாலுகா போலீசார் கைது செய்து, 232.5 கிலோ கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனர். அதைத்தொடா்ந்து ஈரோடு மரப்பாலம் குயவன் திட்டு பகுதியை சேர்ந்த சென்னியப்பன் மகன் சரவணனை(37) கைது செய்தனர்.
கஞ்சா கடத்தலுக்கு உதவியாக இருந்ததாக வழக்கறிஞரான ஈரோடு கள்ளியங்காடு பகுதியை சேர்ந்த இளங்கோவன் மகன் எழில் (38), வழக்கறிஞர் நதியா (32) ஈரோடு மாணிக்கம்பாளையம் ரோடு நேதாஜி நகரை சேர்ந்த ராமானுஜம் மகன் மதன் என்ற மதன்குமார்(39), அவரது மனைவி கவுரி(39) ஆகிய 4 பேரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 10 மாதங்களாக தலைமறைவாக இருந்த எழில், மதன், கவுரி, நதியா. நான்கு பேரையும் ஈரோடு தாலுகா போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT