Published : 07 Mar 2022 06:00 AM
Last Updated : 07 Mar 2022 06:00 AM

செஞ்சி | விவசாயி தற்கொலை சம்பவம் - நிதி நிறுவன ஊழியர்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு

விழுப்புரம்

செஞ்சி அருகே விவசாயி தற் கொலை செய்த சம்பவத்தில் நிதி நிறுவன ஊழியர்கள் உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செஞ்சி அருகே தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சும ணன். விவசாயி. இவரது மகன்கள் சுரேஷ் (32), பாஸ்கரன் (28), சின்னதுரை (23) ஆகியோரும் விவசாயம் செய்து வருகின்றனர். செஞ்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று 2 டிராக்டர்களை வாங்கியுள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட விவசாயி சின்னதுரை.

கரோனா தொற்று காலத்தில்கடன் தவணை கட்ட கால தாமதம் ஏற்பட்டது. இதனால் நேற்று முன் தினம் மதியம் தேவனூர் சென்ற நிதி நிறுவன ஊழியர்கள், அண்ணன்-தம்பிகள் 3 பேரையும் ஆபாசமாக திட்டியதுடன் ஒரு டிராக்டரை பறிமுதல் செய்தனர். இந்த அவமானத்தால் சின்னதுரை அவரது நிலத்திலிருந்த மரத்தில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கிராம மக்கள் இறந்த சின்னதுரையின் உடலை நேற்று முன்தினம் மாலை சேத்துப்பட்டு-செஞ்சி சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகள், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதால் சாலைமறியலை கைவிட்டனர்.

இதனை தொடர்ந்து சின்ன துரையின் உறவினர் பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில் வளத்தி போலீஸார், தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் லிங்கேஸ்வரன், சிவா மற்றும் பெயர் தெரியாத 2 பேர் என 4 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியது உட்பட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x