Published : 26 Feb 2022 09:15 AM
Last Updated : 26 Feb 2022 09:15 AM

பொன்னேரி: மீன் பிடிக்கச் சென்றபோது படகின் இன்ஜின் பழுதானதால் கடலில் குதித்த மீனவர் உயிரிழப்பு

அன்பரசன்

பொன்னேரி: பழவேற்காடு அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, படகு இன்ஜின் பழுதானதால் கடலில் குதித்த 2 மீனவர்களில் ஒருவர் உயிரிழந்த சம்பவம், மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டை அடுத்த செம்பாசிப்பள்ளி குப்பத்தைச் சேர்ந்த அன்பரசன்(21), தேனப்பன்(23) ஆகியஇரு மீனவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் மீன் பிடித்துக் கொண்டு, நேற்று முன்தினம் இரவு பழவேற்காடு பகுதி கடற்கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக படகின்இன்ஜின் பழுதானது. இதனால், அதிர்ச்சியடைந்த மீனவர்கள் இருவரும் கடலில் குதித்தனர்.

இதற்கிடையே அதிகாலை மீன் பிடிக்கச் சென்ற அன்பரசன், தேனப்பன் மாலை 6 மணிக்கு கரை திரும்பாததால், அவர்களை செம்பாசிப்பள்ளி குப்பம் மீனவர்கள் பழவேற்காடு மற்றும் அதையொட்டியுள்ள கடற்பகுதிகளில் தீவிரமாக தேடினர்.

இந்த தேடுதல் பணியில், தேனப்பன் மட்டும் காலில் காயங்களுடன் ஹரிகோட்டா வனப்பகுதியை ஒட்டியுள்ள கடற்கரையோரம் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மீட்கப்பட்டார்.

ஆனால், அன்பரசன் மட்டும் கிடைக்காததால், அவரைத் தேடும்பணியில் 2-வது நாளாக நேற்றுமீனவர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்பணியில் நேற்று மதியம்ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம்அருகே கடற்கரையோரம் அன்பரசன் சடலமாகக் கிடந்துள்ளார்.

திருப்பாலைவனம் போலீஸார்,சம்பவ இடம் விரைந்து, அன்பரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x